தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் விஜய். அப்பா எஸ்.ஏ.சி மூலம் சினிமாவில் அறிமுகமானாலும் அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து தன்னை மெருக்கேற்றிக்கொண்டவர். சிறந்த கதை, சிறந்த நடிப்பு, வித்தியாசமான தோற்றம் என்றெல்லாம் யோசிக்காமல் ஜாலியான காதல், செண்டிமெண்ட், காமெடி, சண்டை காட்சிகள், நடனம் என ஸ்கோர் செய்தார்.
பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை, கில்லி என ஹிட் படங்களை கொடுத்து ஏராளமான ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். விஜயை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்களும் காத்திருந்தார்கள். சமீபகாலமாகவே விஜயின் படங்கள் அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
இப்போது 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். விஜய்தான் சூப்பர்ஸ்டார் என ஒரு கூட்டம் கிளம்பும் அளவுக்கும் அவரின் வளர்ச்சி இருக்கிறது. அப்போதுதான் திடீரென அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்து கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தார்.
2026 சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என அவர் சொல்லி இருக்கிறார். இதற்கிடையில் வருகிற 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் ஒரு பிரமமாண்ட மாநாட்டை நடத்துகிறார் விஜய். இதில், விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
vijay,political,cinima news.