தமன்னாவை ஓவர் டைப் பண்ண பார்க்கிறாங்களாம்!கொஞ்சம் கொஞ்சமாக உடல் உடையை குறைக்கும் ராஷி கண்ணா!

தமன்னாவை ஓவர் டைப் பண்ண பார்க்கிறாங்களாம்!கொஞ்சம் கொஞ்சமாக உடல் உடையை குறைக்கும் ராஷி கண்ணா!

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் ராஷி கண்ணா. ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும், பாடகி ஆக வேண்டும் என பல ஆசைகள் இவருக்கு இருந்தது. கல்லூரி படிப்புக்கு பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே அது அவரின் ஆசையை மறக்க செய்துவிட்டு நடிகையாக மாற்றிவிட்டது.

சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்ட ராஷி கண்ணாவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வரவே பாலிவுட்டில் வாய்ப்பு தேடினார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் போனார். அங்கு தொடர் வாய்ப்புகள் கிடைத்தது. ரவி தேஜாவுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பெல்லாம் அவருக்கு வந்தது.

தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமானார். ‘அட அழகாக இருக்கிறாரே’ என தமிழ் சினிமா ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்தார். அந்த படம் ஹிட் அடிக்கவே தமிழில் தொடர்ந்து நடிக்க துவங்கினார். ஜெயம் ரவியுடன் அடங்க மறு, விஷாலுடன் அயோக்யா, கார்த்தியுடன் சர்தார் என பல படங்களிலும் நடித்தார்.

தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் ஒரு நல்ல வேடம் கிடைத்தது. சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 மற்றும் அரண்மனை 4 ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது. தற்போது தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார்.

ஒருபக்கம், ரசிகர்களை குஷிப்படுத்தவும், மார்க்கெட்டை தக்க வைப்பதற்காகவும் பால் மேனியை அழகாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், வெள்ளை நிற உடையில் அழகை காட்டி ராஷி கண்ணா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்திருக்கிறது.