ஒரு பிட்காயின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இந்திய மதிப்பில் சுமார் 75 லட்ச ரூபாயை நெருங்குகிறது.
இதுவரை இல்லாத அளவில் பிட்காயினின் மதிப்பு இவ்வளவு அதிகரிப்பது ஏன்?
அதற்கு ஒரு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் பெற்ற வெற்றிதான். அமெரிக்காவை உலகின் கிரிப்டோ தலைநகரமாக மாற்றப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கான நிலையான பிட்காயின் கையிருப்பை உருவாக்கவும் கிரிப்டோகரன்ஸிகள் மீதான கட்டுப்பாட்டை குறைக்கவும் அவர் விரும்புகிறார். அமெரிக்க காங்கிரஸும் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்ஸிகளுக்கு ஆதரவாகவே காணப்படுகிறது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளில் முதலீடுகளுக்கான வட்டி விகிதம் குறைந்ததால் வழக்கமான முதலீடுகள் மீதான மக்களின் ஈர்ப்பு குறைந்து வருகிறது. எனவே, பிட்காயின் போன்ற மாற்று முதலீடுகளில் கவனம் செலுத்துகின்றனர்.
சில ஆய்வாளர்கள் பிட்காயினின் மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை செல்லும் என கணித்துள்ளனர்.