யாழ் மாவட்டத்தில் 3 இடங்களில் JVP கட்சி வேட்ப்பாளர்கள் முன் நிலையில் உள்ளார்கள் -அதிர்ச்சி !

யாழ் மாவட்டத்தில் 3 இடங்களில் JVP கட்சி வேட்ப்பாளர்கள் முன் நிலையில் உள்ளார்கள் -அதிர்ச்சி !

யாழ் மாவட்டத்தில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், JVP கட்சியின் 3 வேட்ப்பாளர்கள் பெருவாரியான வாக்குகளை பெற்றுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது, மானிப்பாய், சாவச்சேரி, நல்லூர் என்று பல பிரதேசங்களில் JVP கட்சி முன் நிலை வகித்து வருகிறது.

மானிப்பாய் மற்றும் சாவச்சேரி ஆகிய இடங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோட்டை , இருப்பினும் JVP கட்சிக்கே மக்கள் தமது வாக்குகளைப் போட்டு உள்ளார்கள். போற போக்கில் யாழில் 3 இடங்களை JVP கட்சி கைப்பற்றக் கூடும் என்று எதிர்வு கூறப்படுகிறது.

சங்குச் சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு(DTNA) 2ம் நிலையில் உள்ளது. குறித்த கட்சி பெரும் சங்கடங்களை எதிர்நோக்கியே தேர்தலில் நின்றது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இருப்பினும் உறுதியான ஒரு நிலைப்பாட்டில் DTNA கட்சி இருக்கிறது.