YouTubeல் பேட்டி கொடுத்தால் ஒரு MP ஆகலாம் என்றும், இப்படியான ஒரு மக்கள் கூட்டம் வாக்குப் போட தயாராக இருக்கிறது என்பதனையும் உலகிற்கு காட்டியது இந்த யாழ்ப்பாண தமிழர்கள் தான். தனது 3வது காதலியோடு தான் கொழும்பு செல்ல உள்ளேன் என்று அர்ஜுனா கூறியுள்ளார். ஊசிச் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்று இப்படியும் இலங்கையில் நடக்கும் என்று காட்டியுள்ளார் மருத்துவர் அர்ஜுனா.
முதல் மனைவியை விவாகரத்துச் செய்து, 2ம் மனைவியை விட்டுப் பிரிந்து தற்போது “குஞ்சு” என்று அழைக்கப்படும் காதலியோடு ஊர் சுற்றி வருகிறார். இன் நிலையில் இன்று காலை இவர் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் , யாழ் மக்கள் சிங்கள கட்சிக்கு வாக்கு போட்டு விட்டார்கள் என்று கூறிவிட்டு. அடுத்த 10 நிமிடத்தில் தான் இன வாதம் பேசவில்லை என்ற் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இப்படி மாற்றி மாற்றிப் பேசி, பித்தலாட்டம் போடும் இந்த டுபாக் கூர் மருத்துவரை மக்கள் எப்படி தெரிவு செய்தார்கள் என்பது தான் புரியவில்லை. மாறாக YouTubeல் மக்கள் எந்த அளவு மூழ்கித் திளைத்துள்ளார்கள் என்பதனையும் இது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.