நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், JVP கட்சி பெருவாரியான வெற்றியடைந்த பின்னர், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் தலைவர்கள் அனைவரும், பேசும் போது ஒரு விடையத்தை மிகவும் தெளிவாக முன்வைத்துள்ளார்கள். அது என்னவென்றால் தங்களை நம்பி வாக்குப் போட்ட தமிழர்களை தாம் கைவிட மாட்டோம் என்பது தான். JVP கட்சியைப் பொறுத்தவரை, அவர்கள் சிங்களப் பகுதிகளில் வெற்றியடைந்ததை பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.
ஆனால் …தமிழ்ப் பகுகிதிகளில் JVP அடைந்த வெற்றியை, அக்கட்சியானது பெரிய சாதனையாகப் பார்கிறது. அந்த வகையில் தமிழர் ஒருவரை இலங்கை நாடாழுமன்ற சபாநாயகராக நியமிக்க அனுரா திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. மற்றும் யாழ் JVP அமைப்பின் முக்கிய நபரான சந்திரசேகரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கவுள்ளதாகவும் அக்கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி என்றாலும் தமிழர்களின் மனதை வென்றுவிடவேண்டும் என்ற ஒரு முடிவில் அனுரா உள்ளார்.
இருப்பினும் அதிகாரப் பகிர்வு, பொலிஸ் , காணி அதிகாரங்கள், பொறுப்புக் கூறுதல் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக எந்த கேள்வியை எழுப்பினாலும், அனுரா மெளனமாகவே இருக்கிறார். இது தான் புரியாத புதிராகவே உள்ளது. தற்போது அனுராவுக்கு பாராளுமன்றில் பெரும்பாண்மை என்பதனை விட, அதிகூடிய பெரும்பாண்மை உள்ளது. அவர் நினைத்தால், இனப் பிரச்சனையை ஒரு நொடியில் தீர்த்துவைக்க முடியும். ஆனால் அவர் எப்படி காய் நகர்த்துகிறார் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.