வீட்டுக்குச் செல்ல முன்னர் ஜோ-பைடன் கொடுத்த அனுமதி- ஏவுகணைகளை ரஷ்யா மீது ஏவலாம் !

வீட்டுக்குச் செல்ல முன்னர் ஜோ-பைடன் கொடுத்த அனுமதி- ஏவுகணைகளை ரஷ்யா மீது ஏவலாம் !

Source: Biden gives Zelensky the green light to fire long-range American missiles into Russia

அமெரிக்க தேர்தலில் வெற்றியடைந்துள்ள டொனால் ரம், ஜனவரி மாதம் 20ம் திகதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க்கவுள்ளார். அதுவரை ஜோ பைடனே அமெரிக்க அதிபராக இருப்பார். இன் நிலையில் நேற்று(17) அன்று அவர் உக்ரைன் அதிபருக்கு சில சிறப்பு அனுமதிகளை வழங்கியுள்ளார். அமெரிக்கா உக்ரைனுக்கு கொடுத்த அதி தூரம் சென்று தாக்க வல்ல ஏவுகணைகளை, இனி உக்ரைன் ரஷ்யாவுக்குள் ஏவலாம் என்பதே அந்த அனுமதியாகும்.

இதனை அடுத்து உக்ரைன் அதிபர், ஜெலன்ஸ்கி தனது ராணுவத்திற்கு புதுக் கட்டளைகளைப் பிறப்பிக்க உள்ளார். அமெரிக்கா கொடுத்த நெடுந்தூர ஏவுகணைகளை இனி உக்ரைன் ரஷ்யா நோக்கி ஏவும். இதனால் இனி என்ன நடக்கவுள்ளது என்பது பரமசிவனுக்கே வெளிச்சம். வீட்டுக்குப் போகமுன்னர் 3ம் உலகப் போர் ஒன்றை ஆரம்பித்துவைக்காமல் செல்லமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் ஜோ-பைடன்.