தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக மீண்டும் நாடாளுமன்றத்தில் அரசியல் குற்றவியல் பிரேரணை – தலைநகரில் மக்கள் ஆர்ப்பாட்டம்

தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக மீண்டும் நாடாளுமன்றத்தில் அரசியல் குற்றவியல் பிரேரணை – தலைநகரில் மக்கள் ஆர்ப்பாட்டம்

தென்கொரிய ஜனாதிபதி தென்கொரிய ஜனாதிபதி யூன் சிக் இயோலிற்கு எதிராக மீண்டும் அரசியல் குற்றவில் பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ள நிலையில் ஆயிரக்கணக்கில் மக்கள் பேரணியாக நாடாளுமன்றத்தை நோக்கி சென்றவண்ணமுள்ளனர்.

அரசியல் குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு எதிர்கட்சிக்கு ஆளும் கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே தேவையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் அரசியல் குற்றவியல் பிரேரணையிலிருந்து தப்பிபிழைத்த ஜனாதிபதி அவர் பதவி விலகவேண்டும் என்ற வேண்டுகோள்களின் மத்தியில் தொடர்ந்தும் பதவியில்நீடிக்கின்றார்.

தென்கொரிய தலைநகரில் ஜனாதிபதிக்கு ஆதரவான எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை பெருமளவில் காணமுடிகின்றது.