ரஷ்யாவின் உள்ள Tatarstan என்ற முக்கிய மாநிலத்தில் உள்ள, Kazan, நகரில் உள்ள, மிக முக்கிய குடியிருப்பு மீது, உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அரச அதிகாரிகள், ராணுவத் தளபதிகள் என்று பல முக்கிய குடும்பத்தினர் இங்கே வசித்து வருகிறார்கள். உக்ரைனில் இருந்து சுமார் 1,000Kம் தள்ளி அமைந்துள்ள மற்றும் ரஷ்யாவின் இதயம் என்று அழைக்கப்படும் முக்கிய நகரமான இந்த இடத்தில், உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ள விடையம், ரஷ்ய மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து ரஷ்யா இன்றைய தினம்(சனி-21) 126 ஆளில்லா தாக்குதல் விமானங்களை உக்ரைன் நோக்கி அனுப்பியுள்ளது. இதில் 56 விமானங்களை தாம் சுட்டு வீழ்த்தியதாகவும் மீதம் உள்ள விமானங்களை, தமது எலக்ரானிக் கருவிகள் செயல் இழக்கச் செய்தது என்றும். இதனால் இவை வானில் வெடித்தது என்றும் உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் ராணுவத்திடம் அமெரிக்கா கொடுத்த அதி நவீன, எலக்ராணிக் சாதனங்கள் உள்ளது. இவை ஆளில்லா விமானத்தை செயல் இழக்கச் செய்யும் திறன் படைத்தவை. நேரடிக் காணொளி அதிர்வு இணைய வாசகர்களுக்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது.