அமெரிக்காவே வீழ்த்த முடியாத.. தாலிபான் மீது கை வைத்த பாகிஸ்தான்! பதிலடிக்கு ரெடியாகும் படை.. போச்சு?

அமெரிக்காவே வீழ்த்த முடியாத.. தாலிபான் மீது கை வைத்த பாகிஸ்தான்! பதிலடிக்கு ரெடியாகும் படை.. போச்சு?

 

இஸ்லாமாபாத்: அமெரிக்காவே 20 வருடமாக போர் செய்து வீழ்த்த முடியாமல் திணறிய தாலிபான் மீது பாகிஸ்தான் கைவைத்து உள்ளது. அதிலும் ஆப்கானிஸ்தான் உள்ளேயே புகுந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடமாக அமெரிக்கா நடத்திய மிக நீண்ட போர் கடந்த 2021ம் ஆண்டு முடிவிற்கு வந்தது. கத்தாரில் அமெரிக்காவிற்கும் ஆப்கானிஸ்தானின் தாலிபான் படைக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது
அதன் அடிப்படையில் தாலிபான் தீவிரவாத தாக்குதல்களை நிறுத்துவதாக இருந்தால், செப்டம்பர் 11, 2021க்குள் அமெரிக்கா படைகள் மொத்தமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது. அதோடு தாலிபான் உடனுக்குடன் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது.

அமெரிக்க படைகள் வெளியேறியதை பயன்படுத்தி உடனுக்குடன் தாலிபான் ஆட்சியை பிடித்தது. அமெரிக்கா 20 வருடமாக எந்த அர்த்தமும் இல்லாமல் பல லட்சம் கோடிகளை செலவு செய்து நடத்திய போர் கடைசியில் தோல்வியில் முடிந்தது. அமெரிக்கா வெளியேறிய உடன் தாலிபான் ஆட்சியை உடனே கைப்பற்றியது.

பாகிஸ்தான் செயல்: ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் மையங்கள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாலிபான் மீதான இந்த தாக்குதல்களை ஆப்கானிஸ்தான் அரசு கடுமையாக கண்டித்து உள்ளது.ஆப்கானிஸ்தானில் உள்ளது போலவே பாகிஸ்தானில் தாலிபான் அமைப்பு உள்ளது. இந்த தாலிபான் அமைப்பின் ரகசிய இடங்கள், தளவாடங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளது.

தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) என்று பாகிஸ்தானின் தாலிபான்கள் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி பாகிஸ்தான் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவது வழக்கம். ஆப்கானிஸ்தானில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகளுக்கும் – இவர்களுக்கும் ஆகாது. பாகிஸ்தான் ராணுவத்திரும் இவர்களுக்கும் கூட மோதல் உள்ளது.

பாகிஸ்தானில் தாலிபான் ஆட்சியை நிறுவ வேண்டும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கியெறிவதே இந்த அமைப்பின் குறிக்கோளாகும். அதற்காக, பாகிஸ்தான் ராணுவத்தை நேரடியாகத் தாக்கி, அரசியல்வாதிகளைக் கொன்று பாகிஸ்தானை சீர்குலைக்கும் பணியே டிடிபி அமைப்பின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தாக்குதல் நடத்துவதாக அவ்வப்போது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இவர்களுக்கு சொந்தமான தளவாடங்களில் திடீரென பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

பதிலடி: ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தளவாட பகுதி என்று கருதப்படும் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று இரவு நடந்த இந்த தாக்குதல்களில் லாமன் உட்பட ஏழு கிராமங்கள் குறிவைக்கப்பட்டதாகவும், அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஜெட் விமானங்களே காரணம் என்று அந்நாட்டு அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. பர்மாலில் உள்ள முர்க் பஜார் கிராமம் இந்த தாக்குதலில் கடுமையாக சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த பாகிஸ்தானின் தாக்குதலுக்கு விரைவில் ஆப்கானிஸ்தான் அரசு.. அதாவது தாலிபான் படை தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படை ரீதியாக அவ்வளவு வலிமையாக இல்லாத பாகிஸ்தானுக்கு இது பெரிய சிக்கலாக மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.