சிரியாவில் அசாத்திற்கு ஆதரவான குழுவினர் தாக்குதல் -14 படையினர் பலி

சிரியாவில் அசாத்திற்கு ஆதரவான குழுவினர் தாக்குதல் -14 படையினர் பலி

 

சிரியாவில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பசார் அல் அசாத்திற்கு விசுவாசமான படையினர் மேற்கொண்ட தாக்குதலில் உள்துறைஅமைச்சை சேர்ந்த 14 இராணுவவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவின் மேற்கில் உள்ள மத்தியதரைகடல் நகரமான டார்டுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலைநகரில் உள்ள மிகமோசமான சைடயன்யா சிறைச்சாலை தொடர்பில் அதிகாரியொருவரை உள்துறை அமைச்சை சேர்ந்த படையினர் கைதுசெய்ய முயன்றவேளை அவர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட குழுவை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர் பின்னர் அந்த பகுதிக்கு மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டனர் என சிரியாவின் மனித உரிமை நிலவரங்களை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இரண்டுவாரத்திற்கு கிளர்ச்சிக்குழுவின் அதிரடி இராணுவநடவடிக்கை காரணமாக பசார் அல் அசாத் சிரியாவிலிருந்து ரஸ்யாவிற்கு தப்பியோடினார்.