பிரித்தானியாவை அழிக்காமல் விட மாட்டோம் என்று, புட்டின் ஆதரவு பெற்ற ரஷ்ய ராணுவத் தளபதிகள் சிலர் கூட்டாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், 27 நாடுகள் அங்கம் வகிக்கிறது. அதில் அணு குண்டை ஏவக் கூடிய நாடுகளாக 2 நாடுகளே உள்ளது. அதில் ஒன்று பிரான்ஸ் மற்றைய நாடு பிரித்தானியா. அதிலும் பிரிட்டனிடம் தான் நீர்மூழ்கிக் கப்பலில் அணு ஆயுதம் உள்ளது.
இதனால் ஐரோப்பாவில் எந்த ஒரு கடலிலும் வைத்து ரஷ்யாவை நோக்கி அணு குண்டை பிரிட்டனால் ஏவ முடியும். இதேவேளை பிரான்ஸ் வைத்திருக்கும் அணு ஆயுதம் அவர்கள் நாட்டை காப்பாற்ற மற்றும் நிலையான தளங்களில் பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் பிரான்சில் உள்ள அணு ஏவுகணை தளத்தை எதிரி நாடு அழிக்க முடியும். ஆனால் கடலுக்கு அடியில் , எவருக்கும் தெரியாமல் பணிக்கும் சப்மெரீனில் இருந்து ஏவக் கூடிய அணு குண்டே மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
இதனால் தான் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள 27 நாடுகளைக் காட்டிலும், பிரித்தானியா மிகவும் வலுவான நாடாக உள்ளது. மேலும் சொல்லப் போனால் பிரித்தானிய அரசு, ஒரு திட்டத்தை கொண்டு வந்து உள்ளது. இதனூடாக 800 பில்லியன் யூரோக்களை திரட்டி, பல ஐரோப்பிய நாடுகளுக்கு அணுகுண்டை உருவாக்கும் திட்டத்தை ஏற்படுத்திக் கொடுப்பது. நீர்மூழ்கிக் கப்பல்களை பிரிட்டன் உற்பத்தி செய்து கொடுப்பது என்ற திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இதனால் ரஷ்யா கடும் சீற்றம் கொண்டுள்ளது. இது இவ்வாறு இருக்க உலகில் ஸ்பை சாட்டலைட் என்னும், உளவு பார்க்கும் சாட்டலைட் பல வற்றை அமெரிக்காவே வைத்துள்ளது. இதனால் அமெரிக்கா தான் ஏனைய நாடுகளுக்கு உளவு தகவல்களை கொடுக்க வேண்டி உள்ளது. ஆனால் பிரித்தானியாவிடம் ஏற்கனவே பல உளவு பார்க்கும் சாட்டலைட் உள்ளதால், அவர்கள் அமெரிக்காவை நம்பி இருக்கத் தேவை இல்லை. இன் நிலையில் பிரித்தானியா முன்னெடுக்கும் ஐரோப்பிய பாதுகாப்பு திட்டத்தை, ரஷ்யா கடுமையாக எதிர்க்க ஆரம்பித்துள்ளது. மேலும் சொல்லப் போனால் ..
ரஷ்யாவின் சுமார் 300பில்லியன் அமெரிக்க டாலர்களை ஐரோப்பிய ஒன்றியம், கைப்பற்றி வைத்துள்ளது. இந்தப் பணத்தை அவர்கள் ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்தக் கூடும் என்பது ரஷ்யாவின் பெரும் கவலையாக உள்ளது.