ஆடம்பர சொகுசு கார்களை அடுக்கி வைத்திருக்கும் திரிஷா… அதுவும் இத்தனையா!

ஆடம்பர சொகுசு கார்களை அடுக்கி வைத்திருக்கும் திரிஷா… அதுவும் இத்தனையா!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் குறிப்பாக நட்சத்திர நடிகையாக டாப் அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

மாடல் அழகியாக தனது கெரியரைத் துவங்கி1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் பட்டம் பெற்றார். அதன் பிறகு அதே ஆண்டில் ஜோடி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு திரிஷாவுக்கு கிடைத்தது.

தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தற்போது வரை முன்னணி நடிகையாக எடுத்துப் பிடித்திருக்கிறார். இவர் தற்போது அஜித் உடன் விடாமுயற்சி மற்றும் கமல்ஹாசனுடன் Thug Life உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் திரிஷா வைத்திருக்கும் சொகுசு கார்களின் விவரம் குறித்த தகவல் வெளியாக அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அதன்படி த்ரிஷாவிடம், ரூ. 80 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்று உள்ளது. அத்துடன், ரூ. 75 லட்சம் மதிப்புள்ள Range Rover Evoque கார் வைத்துள்ளார். மேலும், ரூ. 5 கோடி மதிப்புள்ள BMW கார் கோடிக்கணக்கில் கார்களை வைத்திருக்கிறார் திரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.