£8,600 பவுண்டுக்கு ஆசைப்பட்டு ரஷ்யர்களை சுட்ட நபர்கள் இவர்கள் தான் பாருங்கள் !

£8,600 பவுண்டுக்கு ஆசைப்பட்டு ரஷ்யர்களை சுட்ட நபர்கள் இவர்கள் தான் பாருங்கள் !

athirvu

நேற்று முன் தினம்(வெள்ளி இரவு) இசை நிகழ்ச்சியை பார்க கூடியிருந்த ரஷ்ய பொதுமக்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக 4 பேர் துப்பாக்கியால் சுட்டார்கள். இதுவரை 155 பேர் இறந்த நிலையில் மேலும் 185 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் உள்ளார்கள். குறித்த 4 பேரையும் ரஷ்ய புலனாய்வுப் பிரிவினர் மடக்கிப் பிடித்த நிலையில். அவர்கள் வங்கிக் கணக்கில் £8.600 பவுண்டுகள் வைப்பில் இடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தப் பணத்தை சிலர் கொடுத்து, 4 பேரை தயார் செய்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இன்னும் சொல்லப் போனால் இதன் பின்னணியில் ஐ.எஸ் அமைப்பு இருக்கிறதா என்று கூடத் தெரியாமல் இந்த 4 பேரும் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் முஸ்லீம்கள் என்பது தெளிவாகியுள்ளது. ஆனால் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான முழு விபரங்களையும் ரஷ்யா வெளியிடவில்லை.

இவர்களோடு சேர்ந்து இயங்கிய 11 பேரை ரஷ்ய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளார்கள். வெறும் £8,600 பவுண்டுகளுக்கு ஆசைப்பட்டு இவ்வாறு ஈவு இரக்கம் இன்றிக் கொலை செய்துள்ளார்கள். கடைசியில் இந்தப் பணமும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. மாறாக சிறையில் இறக்கப் போகிறார்கள். இவர்களை நீதிமன்றம் கொண்டு செல்லக் கூட புட்டின் விடப்போவது இல்லை என்பது ஊர் அறிந்த விடையம்.

Source: RTV:  Moment Moscow massacre suspects ‘were arrested’ – as videos show alleged killers of 143 claiming they were paid £8,600 for the attack as ISIS claims responsibility.