கருகலைப்புக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்… புரட்சி பெண்கள் அதிர்ச்சி!

இந்த செய்தியை பகிருங்கள்

அமெரிக்கா முழுவதும் கருக்கலைப்பு சட்டப்படி செல்லும் என கடந்த 1973 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அமெரிக்காவில் கிட்டதட்ட அரை நூற்றாண்டாக கருகலைப்புக்கு சட்டரீதியான அங்கீகாரம் இருந்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் மசோதாக்களை மாகாண அரசுகள் அண்மை காலமாக நிறைவேற்றி வருகின்றன. குறிப்பாக குடியரசு கட்சி ஆளும் டெக்சாஸ் உள்ளிட்ட கிட்டதட்ட 20 மாகாணங்களில் கருகலைப்புக்கு கடந்த ஆண்டு இறுதியில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், கருகலைப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று தீர்ப்பளித்தது.

 

 

இந்த தீர்ப்பை எதிர்த்து தலைநகர் வாஷிங்டன், டெக்டாஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் அவ்வபோது கண்டன போராட்டங்கள், பேரணிகள் நடத்தி லருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு அவர்கள், ‘என் உடல் என் உரிமை’ என்ற முழக்கத்துடன், கருகலைப்புக்கு அனுமதி அளிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தை நோக்கி முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. நாடு முழுவதும் கரு கவைப்பு விதிக்கப்பட்டுள்ள தடை செல்லும் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால், என் உடல் என் உரிமை என்று முழங்கிய புரட்சி பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1973 ஆம் ஆண்டு கருகலைப்புக்கு சட்டரீதியாக செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், தற்போது அதற்கு தடை விதித்துள்ளது குறிபபிடத்தக்கது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us