பிரம்மாண்ட வளைகாப்பு விழா…. அமலா பால் வெளியிட்ட போட்டோஸ்!

பிரம்மாண்ட வளைகாப்பு விழா…. அமலா பால் வெளியிட்ட போட்டோஸ்!

கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த சர்ச்சைக்குரிய திரைப்படமான சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை அமலா பால். ஆரம்பத்தில் சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடித்த இவர் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த இங்கு முன்னணி நடிகையாக டாப் இடத்தை பிடித்தார்.

கதை தேர்வில் கவனம் செலுத்தாமல் இஷ்டத்துக்கு கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் நடித்து பெயரை கெடுத்துக்கொண்ட அமலா பிலால் பின்னர் தெளிவாகி சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். அதன் மூலம் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார் நடிகை அமலா பால்.

தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அமலா பால் திருமணத்திற்கு பின்னர் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தபோது நடிகர் தனுஷ் உடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவர் ஏ.எல். விஜய் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

அதன் பின்னர் தனிமையில் வாழ்ந்து வந்த அமலா பால் தற்போது தன்னுடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார். அமலாபால் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் அமலா பாலுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படங்களை ஒரே இணையத்தில் வெளியிட வைரலாகி வருகிறது.