ராஷ்மிகாவையும் விட்டுவைக்காத தனுஷ்… அடுத்த போடு அந்தம்மா தான்!

ராஷ்மிகாவையும் விட்டுவைக்காத தனுஷ்… அடுத்த போடு அந்தம்மா தான்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் ஆன தனுஷ் தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து மார்க்கெட்டை உச்சத்தில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தனுஷ் பிரபல டாப் ஹீரோவாக தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டார்.

கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தற்போது தெலுங்கு படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் திரைப்படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இப்படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா முதன் முறையாக நடிக்கிறார்.

இப்படத்தில் ராஷ்மிகா தனுஷின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இவர்களுக்கான ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் கூடுதலாகவே வைக்கப்பட்டிருக்கிறது. நேஷனல் க்ரஷ் உடன் தனுஷ் நடிக்கப்போவதால் கண்டிப்பாக ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடுவார் என கோலிவுட் முனுமுனுகிறது. எனவே தனுஷின் அடுத்த கிசுகிசு நடிகைகள் லிஸ்டில் கண்டிப்பாக ராஷ்மிகா இடத்தை பிடிப்பார் என இப்போதே பேச துவங்கி விட்டார்கள்.