ரீ ரிலீஸில் பட்டய கிளப்பிய “கில்லி” திரைப்படம் – கோடிக்கணக்கில் வசூல்!

ரீ ரிலீஸில் பட்டய கிளப்பிய “கில்லி” திரைப்படம் – கோடிக்கணக்கில் வசூல்!

கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் வரிசையாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது அந்த வகையில் தற்போது விஜய்யின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான கில்லி திரைப்படம் தற்போது ரீ ரிலீசாகி உள்ளது.

இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை தரணி இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். அதிரடி ஆக்சன் ஜானரில் மாபெரும் அளவில் சாதனை படைத்த திரைப்படமாக முத்திரை பதித்தது.

இந்த நிலையில், வருகிற 20ஆம் தேதி இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்கின்றனர். இந்த நிலையில், ரீ-ரிலீஸில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இதுவரை ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் வெளியாகும் நாளில் இதன் வசூல் மேலும் பல கோடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.