பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் நிகழ்வில் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்- பிரான்ஸ் அதிபர் மைக்ரான் !

பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் நிகழ்வில் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்- பிரான்ஸ் அதிபர் மைக்ரான் !

2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிரான்ஸ், பாரிசில் இடம்பெற உள்ளது. ஜூலை மாதம் ஆரம்பமாக உள்ள இந்த நிகழ்வுகளில், இஸ்லாமிய தீவிரவாதிகளை போல வேடமிட்டு ரஷ்யா தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் மைக்ரான் குற்றம் சாட்டியுள்ளார். நேற்றைய தினம்(வியாழன்) அவர் நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை வழங்கி இருந்தார். இதன்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் 26ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி வரை பாரிஸ் நகரில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில். ரஷ்யா இந்த நிகழ்வைக் குறிவைக்கக் கூடும் என்று அதிபர் இமானுவல் மைக்ரான் கூறியுள்ளார். ரஷ்யாவில் நடந்த நிகழ்வில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில், பிரான்சுக்கும் தொடர்பு உள்ளது என்று, ரஷ்ய அதிபர் புட்டின் ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ள நிலையில்.

இந்த எச்சரிக்கையும் தற்போது வெளியாகியுள்ளது. ஒலிம்பிக் நிகழ்வுகளில் முன்னர் பல லட்சம் மக்கள் கலந்துகொள்வது வழக்கம். ஆனால் கடந்த 20 வருடங்களாக , இன் நிகழ்வை கண்டு கழிக்க மக்கள் செல்லும் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. இதற்கு பயங்கரவாத தாக்குதல் அச்சமும் ஒரு காரணம் ஆகும்.