ஹாலிவுட் இயக்குனரின் படத்தில் இருந்து விலகிய சமந்தா… இணைந்த ஸ்ருதிஹாசன்!

ஹாலிவுட் இயக்குனரின் படத்தில் இருந்து விலகிய சமந்தா… இணைந்த ஸ்ருதிஹாசன்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த சென்னை ஸ்டோரி என்ற படத்தில் இருந்து சமந்தா இப்போது விலகியுள்ளார். அவர் தன்னுடைய சிகிச்சை காரணமாக இந்த படத்தில் இருந்து வெளியேறி இருக்கலாம் என தெரிகிறது.

அவருக்கு பதிலாக அந்த வேடத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு டிடெக்டிவ்வாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக தெரிகிறது. 2004 ஆம் ஆண்டு வெளியான தி அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் என்ற நாவலை மையமாகக் கொண்டுதான் இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.