தன்னுடைய கடைசி படத்துக்காக அக்கட தேசத்தில் இயக்குனர் தேடும் விஜய்!

தன்னுடைய கடைசி படத்துக்காக அக்கட தேசத்தில் இயக்குனர் தேடும் விஜய்!

நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’ என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அரசியலுக்கு வந்துவிட்ட காரணத்தால் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே அவர் நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவரின் கடைசி படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்ற கேள்வி அவரின் ரசிகர்களை தலையைப் பிய்த்து கொள்ள வைத்துள்ளது.

இந்த பட்டியலில் கார்த்திக் சுப்பராஜ், வெற்றிமாறன், ஹெச் வினோத் என பல இயக்குனர்களின் பெயர் அடிபட்டது. இந்நிலையில் தெலுங்கின் முன்னணி இயக்குனரான த்ரிவிக்ரம் விஜய்யின் கடைசி படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக் சொல்லப்படுகிறது. இந்த படத்தை தயாரிக்கும் டிவிவி பிலிம்ஸ் நிறுவனம் ஒரு தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.