மிகவும் பரபரப்பான சூழலில், உங்கள் கதவுகளை லாக் செய்து வீட்டில் தங்கி இருங்கள் என்று பொலிசார் எச்சரிக்கை விடுத்த நிலையில், அந்தப் பகுதிக்கு பல பொலிஸ் கார்கள் வந்து குவிந்துள்ளது. இறுதியாக சில மணி நேர தோடுதலின் பின்னர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் பொலிசார் அறிவித்துள்ளார்கள்.
மெர்சிசைட் பொலிஸார் நேற்று நண்பகல் அளவில் மெர்சிசைட்டின் மோர்டனில் உள்ள விட்லி அவென்யூவில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைக்கப்பட்டனர். ஒரு நபர் வீட்டிற்குள் தன்னைத்தானே தடுத்துக்கொண்டதாக செய்தி வெளியிட்டது. பொலிஸார் பிற்பகல் முழுவதும் தெருவில் உள்ள ஒரு வீடு ஒன்றுக்குள் நுழைவதும் வெளியேறுவதுமாக காணப்பட்டனர்.
இதனை அடுத்து 37 வயதான ஒருவர் சண்டைக்கு தூண்டுதல், பொதுத் தாக்குதல், கொலை மிரட்டல்கள் மற்றும் குற்றச் சேதம் ஆகிய சந்தேகங்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நபர் ஒருவரையே பொலிசார் இவ்வாறு கைதுசெய்துள்ளாகள் என்று பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.