லண்டனில் பொலிசார் ஒரு விசா இல்லாத நபரை தேடி அலைந்து வந்த நிலையில். அவர் வேறு ஒருவர் பெயரில் டிலிவரூ மற்றும் ஊபர் ஆப்பை பாவித்து உணவுகளை டிலிவரி செய்து பணம் சம்பாதிப்பது தெரியவந்தது. அவரை மடக்கிப் பிடிக்க சென்ற பொலிசார் பெரும் ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சம்.
அவரை ஓரம் கட்டி கைது செய்ய நினைக்க, அன் நபர் ஓட ஆரம்பித்து விட்டார். இதில் அவர் முதுகில் பெரிய பை ஒன்றும் இருக்கிறது. அந்தப் பையினுள் உணவுப் பொருட்களும் இருக்கிறது. அத்தனை பாரத்தோடு அந்த மனுஷன் அப்படி ஒரு வேகம் எடுத்து ஓட… லண்டன் பொலிசாரால் அவரை திரத்தி பிடிக்க முடியவில்லை.
30 செக்கனில் மூச்சு வாங்க ஆரம்பித்ததால், அவரை திரத்துவதை நிறுத்தி 2 பொலிசாரும் மேற்கொண்டு என்ன செய்யலாம் ? உதவி கோரலாமா என்று யோசிக்கிறார்கள். சொகுசாக காரில் சென்று, அடிக்கடி காபி குடித்து, நொருக்குத் தீனி தின்று, இப்படி இலகுவான வாழ்கையை வாழும் பொலிசாருக்கு கடுமையான பயிற்ச்சி தேவை என்பதனையே இந்த வீடியோ உணர்த்தி நிற்கிறது.
ஓடிய ஆளுக்கு வாழ்வா சாவா என்ற போராட்டம், இதனால் அவர் மிகவும் துடி துடிப்பாக ஓடித் தப்பியுள்ளார். கீழே வீடியோ இணைப்பு.