நானும் விஜய்யும் அழுத்துட்டோம்…. “வாரிசு” படம் குறித்து குஷ்பு வருத்தம்!

நானும் விஜய்யும் அழுத்துட்டோம்…. “வாரிசு” படம் குறித்து குஷ்பு வருத்தம்!

தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் தோல்வி சந்தித்தது .

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இவர்களுடன் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ் ,ஸ்ரீகாந்த் ,ஷாமு ,எஸ் ஜே சூர்யா, யோகி பாபு ,சங்கீதா கிருஷ் ,கணேஷ் வெங்கட்ராமன், நடிகை குஷ்பு ,சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் குஷ்பு பேசியிருக்கிறார் அதாவது, “வாரிசு படத்தில் எனக்கும், விஜய்க்கும் இடையிலான மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகள் படமாக்கப்பட்டன. ஆனால், படத்தின் நீளம் அதிகமாக இருந்த காரணத்தால் இயக்குனர் வம்சி என்னிடம் ஒப்புதல் வாங்கிவிட்டு நீக்கினார்.

எனக்கும் விஜய்க்கும் இடையிலான அந்த காட்சிகள் படமாக்கப்பட்ட போது நானும் விஜய்யும் உண்மையாகவே அழுதுவிட்டோம். வாரிசு திரைப்படம் வெளிவந்த பின்னர் விஜய்யும் என்னிடம், அந்த காட்சிகள் நீக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார் என குஷ்பு அந்த பேட்டியில் கூறியிருந்தார்.