தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாகவும், ஹேண்ட்ஸம் ஹீரோவாகவும் வலம் வந்தவர் தான் நடிகர் மாதவன். தற்போது 54 வயதாகியும் இவரது மவுசு,மார்க்கெட்டும் இன்னும் கூட குறையவே இல்லை. கடைசியாக மாதவன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா ,மாறன்,இறுதிச்சுற்று போன்ற படங்களின் மூலம் மாஸ் காட்டி இருந்தார்.
இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால், சமீபத்தில் உடல் எடை கூடி காணப்பட்ட மாதவன் 21 நாளில் ஜிம் போகாமல் உடல் எடையை குறைத்துள்ளார். இதுகுறித்த ரகசியத்தை பகிர்ந்துள்ள மாதவன், ” நான் எந்த விதமான உடற்பயிற்சியும் செய்யவில்லை. அதற்கு பதிலாக, உணவை நன்றாக மென்று ரசித்து சாப்பிடுவேன். அத்துடன் 40 முதல் 60 முறை தண்ணீர் குடிப்பேன்.
மாலை 6.45 மணிக்குள் சமைத்த உணவை சாப்பிடுவேன், அதிகாலை 90 நிமிடமும், தூங்குவதற்கு முன்னும் நடைபயிற்சி செய்வேன், இயற்கையான உணவு, பதப்படுத்தப்பட்ட உணவை எடுத்துக்கொண்டு 21 நாட்களில் உடல் எடையை குறைத்தேன் என ரகசியத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் மாதவன்.