பிரித்தானியாவில் தற்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள லேபர் அரசு, விசா இல்லாத அகதிகள் வேலை செய்யும் இடங்களில் கை வைக்க ஆரம்பித்துள்ளது. கார் கழுவும் இடங்கள், பலசரக்கு கடைகள், முடி திருத்தும் நிலையங்கள், என்று பல்வேறு வேலைத் தளங்களில், பலர் விசா இல்லாமல் வேலை செய்து வருகிறார்கள். அதிலும் சில ஐரோப்பிய நாட்டவர்கள் இன்னும் இவ்வாறு கைக் காசுக்கு வேலை செய்து வருகிறார்கள்.
இவர்களை தற்போதைய அரசு குறிவைத்து, கைது செய்து சொந்த நாடுகளுக்கு நாடு கடத்த ஆரம்பித்துள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் அதிகாரிகள் பல வியாபாரஸ் தலங்களுக்கு சென்று சோதனைகளை நடத்த உள்ளார்கள். எனவே தமிழர்களே ஜாக்கிரதை. கடுமையான சட்ட திட்டங்களை லேபர் கட்சி இனி அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.
இதனூடாக பல ஆயிரம் ஐரோப்பியர்கள், பிரித்தானியாவில் இருந்து அகற்றப்படுவார்கள். பிரித்தானியர்களுக்கும் விசா உள்ள நபர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிட்டும். இதுவும் ஒரு வகையில் நன்மை தான் என்று தான் கூறவேண்டும்.