BREAKING NEWS : ஜோ பைடன் திடீர் விலகல் கமலா ஹரிஸ் ஜனாதிபதியாக போட்டியிடுகிறார் – மாபெரும் திருப்பம் !

BREAKING NEWS : ஜோ பைடன் திடீர் விலகல் கமலா ஹரிஸ் ஜனாதிபதியாக போட்டியிடுகிறார் – மாபெரும் திருப்பம் !

என்ன நடந்தாலும் தான் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகப் போவது இல்லை என்று விடாப் பிடியாக இருந்து வந்த ஜோ பைடன், சற்று முன்னர் தான் அதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சனிக்கிழமை வரை போட்டியிடுவதாக அவர் தெரிவித்து வந்த நிலையில் இன்று ஞாயிறு, சற்று முன்னர் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனநாயக கட்சி சார்பாக துணை ஜனாதிபதியாக இருக்கும் கமலா ஹரிஸ் இனி ஜனாதிபதியாக போட்டியிட உள்ளார்.

அவர் ரம்பை எதிர்த்து போட்டியிட உள்ளார். இதனால் திடீரென அமெரிக்க அரசியல் தலை கீழாக மாறியுள்ளது. கமலா ஹரிஸ் போட்டியிட்டு வென்றால், முதல் பெண் அதிபர் என்ற பெயர் மட்டும் அல்ல, முதல் இந்திய வம்சாவழி அதுவும் தமிழ்ப் பெண் அதிபர் என்ற வரலாற்றைப் படைப்பார். ரம்புக்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது. கடந்த 10 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார் பைடன். இன்று தான் அவர் சற்று மீண்டு வந்தார். இன் நிலையில் அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதன் பின்னணியில் அமெரிக்க முன் நாள் அதிபர் ஒபாமா, பில் கிளிங்டன் போன்ற தலைவர்கள் இருந்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இனி ஒபாமா முழு அளவில் கமலா ஹரிசுக்கு ஆதரவாக , தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. கமலா ஹரிஸ் வெற்றியடை ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதனை அவர் சரியாகப் பயன்படுத்தவேண்டும். தமிழர்களுக்கு பெருமை சேரும் தருணம் இது.