அந்த விஷயத்தில் விஜய் தான் பெஸ்ட்.. கீர்த்தி சுரேஷ் பளீச்! என்னம்மா இப்பிடி பண்ணுறீங்களே மா

அந்த விஷயத்தில் விஜய் தான் பெஸ்ட்.. கீர்த்தி சுரேஷ் பளீச்! என்னம்மா இப்பிடி பண்ணுறீங்களே மா

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் இடத்தைப் பிடித்தார் . கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி பிரபலமான நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதனிடையே தனது உடல் எடையை குறைத்து சிக்கன தோற்றத்திற்கு மாறி பாலிவுட் திரைப்படங்களிலும் கவனத்தை செலுத்தி வந்தார் கீர்த்தி சுரேஷ் . வருண் தவானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் நடிகர் தனுஷ் சிறந்த டான்ஸரா? நானி சிறந்த டான்ஸரா? என கேட்க, தனுஷ் தான் என்று பதில் சொன்னார்.

அதன் பின், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் என ஒவ்வொரு நடிகராக மாற்றிக் கொண்டே வந்தார். கடைசியில் விஜய்யா? இல்லை சிரஞ்சீவியா என்று கடைசியாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு கீர்த்தி சுரேஷ், சற்றும் யோசிக்காமல் விஜய் தான் பெஸ்ட் டான்ஸர் என்று கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த பதில் எல்லோரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கீர்த்தி சுரேஷ், keerthy suresh , cinema news , Kollywood news ,