ஹீரோ… வில்லன்னு மாஸ் காட்டும் நடிகர் பகத் பாசில் – மொத்த சொத்து எத்தனை கோடி தெரியுமா?

ஹீரோ… வில்லன்னு மாஸ் காட்டும் நடிகர் பகத் பாசில் –  மொத்த சொத்து எத்தனை கோடி தெரியுமா?

பிரபல மலையாள நட்சத்திர நடிகர் ஆன பகத் பாஸில் தமிழில் வில்லனாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா மக்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகராக பார்க்கப்பட்ட வருகிறார். பெங்களூர் டேஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர் தொடர்ந்து வேலைக்காரன் ,சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்த தமிழ் சினிமா ரசிகர்களின் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல நடிகையான நஸ்ரியா நசீமை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபஹத் ஃபாசில் தற்ப்போது அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று 42 வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் பகத் பாசிலின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு படத்தில் நடிக்க ரூ. 3 கோடி சம்பளம் வாங்கும் பகத் பாசிலுக்கு மொத்தம் ரூ. ரூ. 50 கோடி சொத்துக்கள் உள்ளதாம். கேரளா கொச்சியில் பிரமாண்ட வீடு, மேலும் Porsche 911 Carrera S, Mercedes Benz E Class, Range Rover Vogue உள்ளிட்ட சொகுசு கார்களையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

actor-fahad-fazil-net-worth-on-his-42nd-birthday