ஆஸ்கார் விருந்து பெரும் “தங்கலான்”… பிரபலம் சொன்ன தகவல்!

ஆஸ்கார் விருந்து பெரும் “தங்கலான்”… பிரபலம் சொன்ன தகவல்!

நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி திருவோத் கதாநாயகிகளாக நடித்து உள்ளனர். மற்றொரு முக்கிய வேடத்தில் பசுபதி நடிக்கிறார்.

இப்படத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் நடந்த கேஜிஎஃப் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இதில் விக்ரம் வித்யாசமான மிரட்டலான தோற்றத்தில் நடித்து மிரள வைத்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் புரோமோசன் கோவையில் நடைபெற்றது. அங்கு படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது தங்கலான் படம் ஆஸ்கருக்குச் செல்லுமா? என கேட்டதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் ” ஆம, ஆஸ்கருக்கு கொண்டு செல்லும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். படம் கட்டாயாம் ஆஸ்கருக்கு பரிந்துரைப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கூறினார்.

தங்கலான் திரைப்படம் , நடிகர் விக்ரம், thangalaan , cinema news , Kollywood news ,