ஸ்டைலு ஸ்டைலுமா இது சூப்பர் ஸ்டைலுமா… விக்ரமுடன் Airport’ல் கெத்தா நடந்து வரும் மாளவிகா!

ஸ்டைலு ஸ்டைலுமா  இது சூப்பர் ஸ்டைலுமா… விக்ரமுடன் Airport’ல் கெத்தா நடந்து வரும் மாளவிகா!

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசரவைத்தார்.

முதல் படத்திலே ரஜினியுடன் நடித்ததால் அந்த படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதன் பிறகு மாஸ்டர் திரைப்படம், மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக மார்க்கெட் இழந்து போனார்.

இந்நிலையில் தற்போது நடிகை மாளவிகா மோகனன் தங்கலான் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த வருகிறார் . இந்த படம் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வருகிறது. படத்தின் ப்ரோமோஷன்களுக்காக தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் விக்ரம் மற்றும் மாளவிகா ஏர்போர்ட்டில் செம ஸ்டைலாக நடந்து வரும் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

மாளவிகா மோகனன் , malavika mohanan , cinema news , latest news