திரிஷாவுக்கு தினமும் சாப்பாடு அனுப்பும் நட்சத்திர ஹீரோ… யாருன்னு கொஞ்சம் பாருங்க!

திரிஷாவுக்கு தினமும் சாப்பாடு அனுப்பும் நட்சத்திர ஹீரோ… யாருன்னு கொஞ்சம் பாருங்க!

நட்சத்திர நடிகையான திரிஷா தமிழ் தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். 2000 காலகட்டத்தில் நடிப்பு பயணத்தை துவங்கியவர்.

இவர் தமிழை போன்றே தெலுங்கிலும் அவர் தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று வரை தனது மார்க்கெட் குறையாமல் தொடர்ச்சியாக விஜய் அஜித் என அடுத்தடுத்த சூப்பர் ஹிட் ஹீரோக்களுடம் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

இரண்டாவது இன்னிங்சிற்கு பிறகு உச்ச நடிகை என்ற அந்தஸ்தை பிடித்துள்ள நடிகை திரிஷாவின் கைவசம் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
மேலும், த்ரிஷா தெலுங்கில் சிரஞ்சீவி உடன் “விஸ்வாம்பரா” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில போட்டோக்களை த்ரிஷா வெளியிட்டு இருக்கிறார். அதில் தனக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான் வீட்டில் இருந்து உணவு அனுப்புகிறார் என கூறி வகை வகையான சாப்பாடு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

நடிகை த்ரிஷா , சிரஞ்சீவி, விஸ்வாம்பரா , Trisha , chiranjeevi ,