அண்ணன் வரார் வழிவிடு.. மாஸா வெளிவந்த “GOAT” டிரைலர்!

அண்ணன் வரார் வழிவிடு.. மாஸா வெளிவந்த “GOAT” டிரைலர்!

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.

இரட்டை வேடத்தில் விஜய் இப்படத்தில் நடிக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார். அவர்களுடன். லைலா, பிரசாந்த் , பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், சற்று முன் கோட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. அட்டகாசமாக வெளியாகி உள்ள அந்த டிரைலரின் ஆரம்பத்தில் “அண்ணன் வரார் வழிவிடு” என்று எழுத்துக்களுடன், அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் டிரைலர் பட்டையை கிளப்புது.

 

இப்படத்தில் மகன் விஜய் “காந்தி” என்ற ரோலில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்னேகா நடித்துள்ளார். மேலும் வயசானாலும் “சிங்கம் சிங்கன்தான்யா” உள்ளிட்ட வசனங்கள் மாஸாக இருக்கிறது. டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் இதை ஷேர் செய்து டிரெண்டாக்கி வருகின்றனர். இதோ ட்ரைலர் வீடியோ: https://www.youtube.com/watch?v=jxCRlebiebw