ரஷ்யாவுக்கு உள்ளே எப்படி உக்ரைன் ஊடுருவியது பிரிட்டன் கொடுத்த சலெஞ்சர் கவச வாகனத்தை கண்டு அஞ்சுகிறதா ரஷ்யா ?

ரஷ்யாவுக்கு உள்ளே எப்படி உக்ரைன் ஊடுருவியது பிரிட்டன் கொடுத்த சலெஞ்சர் கவச வாகனத்தை கண்டு அஞ்சுகிறதா ரஷ்யா ?

கடந்த சில தினங்களுக்கு முன்னர், திடீரென ரஷ்ய எல்லையைத் தாண்டி உக்ரைன் படை அணி ஒன்று ரஷ்யாவுக்குள் ஊடுருவியுள்ளது. இந்தப் படையணியில் சுமார் 1,000 உக்ரைன் படை வீரர்கள் உள்ளதாகவும். இவர்களுக்கு பாதுகாப்பாக பிரித்தானியாவால் கொடுக்கப்பட்ட சலெஞ்சர் என்ற கவச வாகனங்கள் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது ருயிட்டர்ஸ் செய்திச் சேவை.

இந்த சலெஞ்சர் கவச வாகனத்தைக் கண்டு ரஷ்யா ஏன் அஞ்சவேண்டும், அதில் அப்படி என்ன விசேட தாக்குதல் திறன் உள்ளது என்பது பற்றி இங்கே பார்கலாம். ரஷ்யாவின் “கோஷ்” என்னும் நகரத்தை கைப்பற்றி, அங்கிருந்து உக்ரைன் படைகள் முன்னேறி வருகிறது. உக்ரைன் படைக்கு பாதுகாப்பாகச் சென்றுள்ள சலெஞ்சன் என்னும் கவச வாகனங்கள் அதி நவீன ஆயுதங்களைக் கொண்டுள்ளது. இந்த கவச வாகனத்தில் அதி சக்தி வாய்ந்த ராடர் இருப்பதால், பல மைல் தொலைவில் பறக்கும் விமானத்தைக் கண்டறிந்து, அது தன்னை நோக்கி வருகிறதா என்று ஆராய்ந்து உடனே , அதி நவீன MBT என்னும் விமான எதிர்ப்பு ஏவுகணையை ஏவி விடும். இது ரஷ்யா வைத்திருக்கும் SU ரக விமானங்களையும் குறிவைத்து தாக்க வல்லது.

இது போக தரையில் , உள்ள ஆபத்துகளை தானாகவே கண்டு பிடித்து முன்னறிவித்தலை தருவதோடு, புது வகையான கவசம் கொண்டவை. சாதாரண ராக்கெட் லோஞ்சர்(RPG) கொண்டு இதனை தாக்கி அழிக்க முடியாது.  அத்தோடு களத்தில் உள்ள அனைத்து இடங்களையும் இது தானாகவே ஸ்கேன் செய்கிறது. ஆபத்து எங்கே இருக்கிறதோ அந்த இடம் நோக்கி தானாகவே திரும்பி நிற்க்கும். சுட வேண்டும் என்றால் மட்டுமே அதனை இயக்கும் நபர் பட்டனை மட்டும் அழுத்த வேண்டும். இப்படி தரையில் இருக்கும், ஆபத்தையும் அழித்து. வானில் வரும் ஆபத்தையும் அழிக்க வல்லது சலெஞ்சர் 2 ரக டாங்கிகள்.

 

 

இதனை தான் சில மாதங்களுக்கு முன்னர் பிரிட்டன், உக்ரைனுக்கு வழங்கி இருக்கிறது. இந்த சலெஞ்சர் 2 கவச வாகன உதவியோடு தான் ரஷாவுக்குள் தற்போது உக்ரைன் படைகள் ஊடுருவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இதில் மிகவும் ஆச்சரியமான விடையம் என்னவென்றால் ரஷ்ய ராணுவம் இன்னும் இவர்களை திருப்பித் தாக்க வில்லை என்பது தான். நன்றாக உள்ளே ஊடுருவ விட்டு பின்னர் தாக்கலாம் என்ற, திட்டத்தில் ரஷ்ய ராணுவம் உள்ளதா ? என்பது தெரியவில்லை. ஆனால் வான் வெளித் தாக்குதலை ரஷ்யாவால் நடத்த முடியவில்லை. காரணம் இன்னும் பல விமானங்களை இழக்க ரஷ்யா தாராக இல்லை என்பது உண்மை. ஒரு கவச வாகனத்தை அழிக்கப் போய், F16 போன்ற அதி நவீன விமானங்களை ரஷ்யா இழக்க நேரிடும். அது தான் உண்மை நிலை.