தமிழ் சினிமாவில் காலம் காலமாக இரு துருவ நட்சத்திரங்கள் எப்போதுமே போட்டி போட்டுக்கொள்வார்கள். அவர்கள் போட்டி போட்டுக் கொள்கிறார்களோ இல்லையோ அவர்களின் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு நீயா நானா என அடித்துக் கொண்டு தங்களது. ஃபேவரிட் ஹீரோவின் படங்களை வெற்றி பெறச் செய்வார்கள்.
அப்படித்தான் எம்ஜிஆர் – சிவாஜி கணேசன்….கமல்ஹாசன் – ரஜினிகாந்த் தற்போது விஜய் – அஜித் என இந்த போட்டி நிலவி வருகிறது அப்படித்தான் அஜித் விஜய் ரசிகர்கள் எப்போதும் போட்டி போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் தற்போது அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான். அப்படி எல்லாம் இல்லை என வெங்கட் பிரபு சமீபத்தில் கூறியிருக்கிறார்.
அதாவது சில நாட்களுக்கு முன்னர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது நான் கோட் படத்தின் படப்பிடிப்பிலிருந்து அஜித் அண்ணாவை பார்க்க போறேன் என்று விஜய்யிடம் சொல்லிவிட்டு சென்றேன். அதற்கு விஜய் நீ அங்க போனதும் எனக்கு போன் போட்டு கொடுடா என்று சொன்னார். உடனே நாங்க போய் அஜித் சார் மீட் பண்ணிட்டு உடனே போன் போட்டு கொடுத்தேன்.
அவங்க ரெண்டு பேருமே மிகவும் சாதாரணமா இயல்பா நல்ல நண்பர்களாக பேசினார்கள். அதை நான் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். சந்தோஷமாக பேசிட்டு இருந்தாங்க என இயக்குனர் வெங்கட் பிரபு கூறி இருக்கிறார். இதன் மூலம் அவர்கள் நல்ல நண்பர்களாக தான் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
அஜித் , விஜய் , Actor ajith , vijay , cinema news , Kollywood news