உக்ரைன் F16 விமானத்தை சுட்டு வீழ்த்த ரஷ்யா தனது ஏவுகணைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

உக்ரைன் F16 விமானத்தை சுட்டு வீழ்த்த ரஷ்யா தனது ஏவுகணைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் அமெரிக்கா தனது F16 ரக அதி நவீன போர் விமானத்தை உக்ரைனுக்கு, நெதர்லாந்து நாடு ஊடாக வழங்கி இருந்தது. மிகவும் சக்த்திவாய்ந்த இந்த F16 ரக போர் விமானத்தைப் பாவித்து, உக்ரைன் ரஷ்யப் படைகள் மீது தாக்குதல் நடத்தினால், அதனை சுட்டு வீழ்த்த என தனது ஏவுகணைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது ரஷ்யா என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இது போக…

தனது ஆயுத உற்பத்தியை பன் மடங்காக ரஷ்யா உயர்த்தியுள்ள அதேவேளை. வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை விற்க்க தற்காலிக தடையை கொண்டுவந்துள்ளது. ரஷ்யா தனது தரமுயர்த்தப்பட்ட ஏவுகணையின் பெயரையோ இல்லை அது எந்த விதத்தில் செயல்படும் என்பது பற்றியோ குறிப்பிட மறுத்து விட்டது. ஆனால் நாங்கள் புது வகையான ஏவுகணை ஒன்றை தயாரித்து உள்ளோம். அது F16 ரக போர் விமானங்களை சுட்டு வீழ்த்த வல்லது என்று மட்டும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் நாட்டிடம் தற்போது 6 F16 ரக அதி நவீன போர் விமானங்கள் உள்ளது. இருப்பினும் அதில் பொருத்தப்படக் கூடிய jassm missile என்ற ஏவுகணையை அமெரிக்கா உக்ரைனுக்கு கொடுக்கவில்லை. இந்த ஏவுகணை மிக மிக சக்த்திவாய்ந்த ஏவுகணை. இதனைப் பாவித்து வானில் பறக்கும் விமானம் தொடக்கம், தரையில் உள்ள இடங்களையும் குறிவைத்து தாக்க முடியும். இது பெரிய அழிவை ஏற்படுத்த வல்லவை. இதனால் jassm missile இந்த ஏவுகணையை மட்டும் அமெரிக்கா கொடுக்கவில்லை. ஆனால் சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிபடையில், jassm missile ஏவுகணையை அமெரிக்கா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி என்ன எல்லாம் நடக்க உள்ளதோ தெரியவில்லை.