பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்த நடிகர் விஜய்!

பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்த நடிகர் விஜய்!

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.

இரட்டை வேடத்தில் விஜய் இப்படத்தில் நடிக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார். அவர்களுடன். லைலா, பிரசாந்த் , பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை காட்சிப்படுத்தியுள்ளனர். விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்திக்கொள்ள பிரேமலதா விஜயகாந்த் அனுமதி அளித்திருந்தார். இதையடுத்து கோட் திரைப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் காட்சிகளுக்கு அனுமதி அளித்த பிரேமலதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் நடிகர் விஜய். இந்த சந்திப்பின்போது அவருடன் கோட் திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நடிகர் விஜய், நடிகர் விஜயகாந்த் , கோட் திரைப்படம், actor vijay , vijayakanth