யாழில் சுயேட்ச்சையாக நின்று, வெற்றிபெற்று MP ஆகியுள்ளார் மருத்துவர் அர்ச்சுணா. ஆனால் இந்தக் கோமாளியை மக்கள் எப்படி தெரிவுசெய்தார்கள் என்ற பெரும் விவாதம் நடைபெற்று வரும் நிலையில். இலங்கையில் உள்ள சிவில் சமூகம், சி.ஐ.டி விசாரணையை கோரியுள்ளது. தேர்தல் முடிவடைந்து, பாராளுமன்றம் முதன் முறையாக கூடியவேளை, உள்ளே நுளைந்த அர்ச்சுணா, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்துள்ளார். பாராளுமன்ற குமாஸ்தா சொல்லியும் அவர் கேட்டபாடாக இல்லை.
இது நல்ல ட்ரென்ட் ஆகும் என நினைத்து, இவர் இதனை வீடியோ எடுத்து தனது முக நூலில் போட, அதனையும் மக்கள் பார்த்து ரசித்து பாராட்டியுள்ளார்கள். இப்படியான கோமாளித்தனமான வேலைகளைச் செய்வது இவரது வாடிக்கை. இதனைப் பார்த்த சில கோமாளிகள் போட்ட வாக்கில் தான் அவர் MP ஆகியுள்ளார். இது ஒரு பாராளுமன்ற அவமதிப்பு ஆகும். இலங்கைப் பாராளுமன்றில், ஆழும் கட்சிக்கு என ஒரு இடம், எதிர் கட்சிக்கு என்று ஒரு இடம் இருக்கிறது. அதனைத் தவிர ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு என்று பிரத்தியேக ஆசனங்கள் உள்ளது.
ஆனால் அர்ச்சுணா இவை எதனையும் கருத்தில் கொள்ளாமல், இப்படி சஜித் ஆசனத்தில் அமர்ந்து ஒரு ஸ்டன்ட் காட்டுவோம், வீடியோ வைரலாக பரவும் என்று நினைத்து. வேண்டும் என்றே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார் என்பது தான் குற்றச்சாட்டு. இது விதி மீறல் ஆகும். இதனால் சி.ஐ.டி பிரிவினர் அர்சுணாவை விசாரணை செய்ய உள்ளார்கள். குற்றம் நிரூபனமானால் தண்டனை உண்டு. பின்னர் பாராளுமன்ற ஆசனத்தையும் இழக்கக் கூடும். எப்படி இந்த கோமாளியை மக்கள் தெரிவு செய்தார்கள் என்பது தான் இன்றுவரை புரியாத புதிராக உள்ளது.