சுமார் 280க்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் ரஷ்ய படைகளோடு இணைந்து, உக்ரைனுக்கு எதிராக சண்டையிட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர்களின் ஒருவரை உக்ரைன் ராணுவம் உயிருடன் பிடித்துள்ளது. இலங்கையில் உள்ள ரஷ்ய மாஃபியாக்கள், மூலமாக ரஷ்ய ராணுவத்திற்கு ஆட்களை திரட்டி வருகிறார்கள். முன் நாள் ராணுவத்தினர், ராணுவத்தை விட்டு ஓடி வந்த நபர்களையே இந்த ரஷ்ய கும்பல் குறிவைத்துள்ளது.
நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கூறி, இந்த இலங்கை ராணுவ சிப்பாய்களை ரஷ்ய மாஃபியா கும்பல் விமானத்தில் ஏற்றி அனுப்பி வருகிறது. ஆனால் இது முறையாக இலங்கை அரசிடன் அனுமதி பெற்று நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது சாதாரன தொழில் வாய்ப்பின் கீழ் வராது. எனவே இந்தக் கும்பலை நம்பி எவரும் செல்லவேண்டாம் என இலங்கை தொழில் துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது இவ்வாறு இருக்க, பல ஆசிய நாடுகளில் இருந்து இவ்வாறு ரஷ்யா தனது ராணுவத்திற்கு ஆட்களை சேர்த்து வருவதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.