சீரியல்களில் குடும்ப குத்து விளக்கு போல் நடிக்கும் கேப்ரில்லா இது? மாடர்ன் உடையில் கும்முனு போஸ்!

சீரியல்களில் குடும்ப குத்து விளக்கு போல் நடிக்கும் கேப்ரில்லா இது? மாடர்ன் உடையில் கும்முனு போஸ்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் சீரியல் நடிகை கேப்ரில்லா செலஸ். முன்னதாக இவர் தனது சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதனிடையே டிக் டாக் வீடியோ, டப்ஸ்மாஷ் வீடியோ உள்ளிட்டவற்றில் கருத்தான வசனங்களை பேசி மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதன் மூலம் அவருக்கு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஐரா திரைப்படத்தில் இளம் வயது நயன்தாராவாக நடித்தார்.

கருப்பான நிறத்தில் இருக்கும் கேப்ரில்லா கிராமத்து பாங்கான கதாபாத்திரத்திற்கு பக்கவாக பொருத்தம் ஆகிவிட்டார். சுந்தரி சீரியலில் இவரின் பேச்சும் கிராமத்து ஸ்டைலில் இருப்பதால் வெகுவாக மக்களின் கவனத்தை கூடிய சீக்கிரத்திலேயே கவர்ந்திழுத்து விட்டார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது மாடர்ன் உடை அணிந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சுந்தரி சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடிக்கும் கேப்ரில்லா இவ்வளவு மாற்றமா என வாய் அடித்து போய்விட்டார்கள்.


கேப்ரில்லா செலஸ், gabriella sellus , gabriella sellus photos , Cinema news