கூலி படத்தில் நாகர்ஜூனாவின் கதாபாத்திரம் – POSTER உடன் அறிவித்த படக்குழு!

கூலி படத்தில் நாகர்ஜூனாவின் கதாபாத்திரம் – POSTER உடன் அறிவித்த படக்குழு!

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக தற்போது நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “கூலி” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்ச நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரித்திருந்தது.

இதில் ரஜினியின் மேனரிசம் வேற லெவலில் இருந்தது. குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு இந்த டீசரை பார்த்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வெறித்தனமாக அதிகரித்து விட்டது. இந்த டீசரில் கண்ணதாசனின் வரிகள் டயலாக் ஆக யூஸ் பண்ணப்பட்டுள்ளது. இதுவரை பார்க்காத ரஜினியை இந்த படத்தில் வித்தியாசமாக லோகேஷ் கனகராஜ் காட்சி படுத்திருக்கிறார்.

குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் சூப்பர் ஸ்டார் வேற லெவலில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். கூஸ்பம்ஸ் ஆகும் அளவிற்கு அவ்வளவு சிறப்பாக அவரது காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.இப்படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ரூ 260 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தை குறித்த ஸ்வாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் ஸ்டார் நடிகர் நாகர்ஜூனாவின் கதாபாத்திரத்தை “சைமன்” என்று போஸ்டருடன் அறிவித்துள்ளது படக்குழு!

 

நாகர்ஜூனா, கூலி , ரஜினிகாந்த் , Rajinikanth cooli , nagarjuna ,