புலிகளின் தாக்குதல் படகு உக்த்தியை கையாள்கிறதா உக்ரைன் ? தற்கொலை படகுகள் தயார்

புலிகளின் தாக்குதல் படகு உக்த்தியை கையாள்கிறதா உக்ரைன் ? தற்கொலை படகுகள் தயார்

விடுதலைப் புலிகளின் கடல் படை என்பது ஒரு காலகட்டத்தில் மிகவும் பலமாக இருந்தது. தமிழீழ கடற்கரைகளை புலிகளின் கடல்படை காவல் காத்து வந்தது. அவர்கள் தாமே பல படகுகளை வடிவமைத்து, தாயாரித்தும் வந்தார்கள். இதில் நீர்மூழ்கிக் கப்பலும் அடங்கும். அதிவேக தற்கொலை தாக்குதல் படகையும் புலிகள் தாமே தயாரித்து வைத்திருந்தார்கள். இவை கப்பலில் உள்ள ராடர் கருவிகளின் கண்ணில் மண்ணைத் தூவி, படுவேகமாகச் சென்று கப்பல்களை தாக்கி அழிக்கவல்லவை.

தற்போது உக்ரைன் நாடு பல தற்கொலை தாக்குதல் படகுகளை தயாரித்து உள்ளது. இவை அனைத்துமே ரிமோட் கன்றோல் மூலம் இயங்கக் கூடியவை. புலிகளின் படகு வடிவமைப்பை ஒத்தவை. கடலில் வேகமாகச் செல்லவும். ராடர் திரைகளின் தென்படாமலும் இருக்கும் வகையில் இவை அமைந்துள்ளது. இலங்கையில் போர் நடைபெற்ற கால கட்டத்தில், இலங்கை விமானப்படையிடம், சில விமானங்கள் இருந்தது. ஆனால் இலங்கையில் உள்ள எந்த ஒரு விமானியாலும் துல்லியமாக புலிகளின் நிலையை தாக்க முடியவில்லை.

இதனால் இலங்கை அரசு பெரும் பணத்தைக் கொடுத்து, உக்ரைன் நாட்டு விமானிகள் சிலரை இலங்கைக்கு வரவளைத்து. அவர்களிடம் வரை படங்களைக் கொடுத்து தாக்குதல்களை நடத்தச் சொன்னது. இதனால் உக்ரைன் விமானிகள் மற்றும் சில ராணுவ உயர் அதிகாரிகள், இலங்கை வந்து நிலமையை ஆராய்ந்தார்கள். அவர்களின் பலருக்கு தெரிந்து இருக்கும் புலிகள் என்றால் யார் என்று. இதனால் தற்போது உக்ரைன் தயாரித்துள்ள படகுகள், புலிகளின் படகுகளை ஒத்தவையாக இருப்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

இதுபோக, ரஷ்ய போர் கப்பல்களை தாக்கி அழிக்க, இந்த தற்கொலைப் படகை உக்ரைன் பயன்படுத்த உள்ளது. ஆனால் எந்த தப்பும் இல்லை என்கிறது அமெரிக்கா மற்றும் மேற்கு உலக நாடுகள். ஆனால் புலிகள் இதனை 22 வருடங்களுக்கு முன்னர் பாவித்தவேளை. புலிகள் தற்கொலை தாரிகள், அவர்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தியது இந்த மேற்கு உலகம். ஆனால் இதனைத் தான் உக்ரைன் பாவிக்கிறது. ஆனால் ரஷ்யாவுக்கு எதிராக என்றபடியால், அது குற்றமே இல்லை. இது தான் உலகம். எப்பவுமே வல்லரசுகள் எது செய்தாலும் குற்றம் இல்லை.