பிரச்சனையை Left Hand’ல Handle பண்ற மைக்கேல் ஹஸ்லி – பிரதர் Audio வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி நடனம்!

பிரச்சனையை Left Hand’ல Handle பண்ற மைக்கேல் ஹஸ்லி – பிரதர் Audio வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி நடனம்!

நடிகர் ஜெயம் ரவி உருகி உருகி காதலித்து ஆசையாய் திருமணம் செய்து கொண்ட மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். இந்த விவாகரத்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து இவர்கள் இருவரை குறித்தும் அடுக்கடுக்கான செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.

குறிப்பாக ஜெயம் ரவி பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் ரகசிய தொடர்பில் இருந்து வருவதாகவும் அவருடன் பொழுதை கழித்து வருவதாக கோவாவில் மூன்று மாதங்களாக அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி பகிரங்கமாக புகார் தெரிவித்திருந்தார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்திய பேட்டிகளில் நிரூபர்களிடம் பேசிய ஜெயம்ரவி கெனிஷா பிரான்சிஸ் பற்றி வெளிவரும் செய்திகள் தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் அவரை இந்த விஷயத்தில் இழுக்காதீர்கள் என சப்போர்ட் செய்ததால் அவருடன் ரகசிய தொடர்பில் இருக்கிறார் என்பதை அவரே தன்னுடைய வாயால் உறுதிப்படுத்திவிட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரதர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஜெயம் ரவி முதன்முறையாக மனைவி இல்லாத ஒரு மேடையில் கலந்து கொண்டார். அப்போது ஹரிஷ் ஜெயராஜ் உடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

jeyam ravi , cinema news , brother audio launch , cinema news , kollywood news

jeyam ravi dance video goes viral