69 பட பூஜை.. அனிருத், பிரகாஷ் ராஜ் என எல்லோரும் மிஸ்ஸிங்!விரைவில் படைப்பிடிப்பு ஆரம்பம்,Exclusive photos!

69 பட பூஜை.. அனிருத், பிரகாஷ் ராஜ் என எல்லோரும் மிஸ்ஸிங்!விரைவில் படைப்பிடிப்பு ஆரம்பம்,Exclusive photos!

அரசியல் கட்சியை தொடங்கி உள்ள தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக தளபதி 69 படம் உள்ளது. இப்படத்தின் அப்டேட்டுகளை படக்குழு ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு வரும் நிலையில் படத்தின் பூஜை இன்று தடபுடலாக நடந்துள்ளது. அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

மாஸ் ஹீரோ வசூல் மன்னன் என பெயர் எடுத்த நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அறிக்கை வெளியிட்டார்.அதில், ஒப்புக்கொண்ட படப்பணிகளை முடித்து விட்டு படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு, முழுவதுமாக அரசியலில் இறங்குவதாக அறிவித்திருந்தார். விஜய் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சியான செய்தியாக இருந்த போதும், அவர் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

அதன் பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்தார். அப்பா, மகன் என இரண்டுவிதமான ரோலில் விஜய் நடித்து அசத்தி இருந்தார். குறிப்பாக மகன் ரோலில் அதிரடி வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருந்தார் விஜய். மேலும், இப்படத்தில் விஜய்யுடன் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், பிரேம்ஜி, யோகி பாபு என பலர் நடித்திருந்தனர். இப்படம் செப்டம்பர் 5ந் தேதி தியேட்டரில் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடியை வசூலாக அள்ளிய இத்திரைப்படம உலக அளவில் 440 கோடி வசூலை அள்ளியது.