30 முன் நாள் MPக்கள் ஜெகா வாங்கினார்கள் -இலங்கையில் இன்று அடிக்கும் அலை இது தான் !

30 முன் நாள் MPக்கள் ஜெகா வாங்கினார்கள் -இலங்கையில் இன்று அடிக்கும் அலை இது தான் !

வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள, பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவது இல்லை என சுமார் 30க்கும்  மேற்பட்ட முன் நாள் MPக்கள் அறிவித்தல்களை விடுத்துள்ளார்கள். இதில் பெரிய தலைவர்களான மற்றும் முன் நாள் ஜனாதிபதியுமான மைத்திரிபாலவும் அடங்குகிறார். சபாநாயகர் சமால் ராஜபக்ஷ, மகிந்த யாப்ப அபயவர்த்தன, முன் நாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, விஜயதாச ராஜபக்ஷ, வாசுதேவ நாணயக்கார என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. காரணம் இவர்கள் போட்டியிட்டாலும் படுதோல்வி அடைவது நிச்சயம் என்ற நிலை உருவாகியுள்ளது.

அதாவது இலங்கையில் ஒரு மாற்றம் வேண்டும், என்று மக்கள் கருதுகிறார்கள். அதனால் அவர்கள் படித்த மற்றும் இளைஞர்களை ஆட்சிக்கு கொண்டுவர விரும்புகிறார்கள் என்பது, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஊடாக நன்றாகப் புலப்படுகிறது. இதனால் பழைய அரசியல் வாதிகளுக்கு மக்கள் வோட்டுப் போட தயாராக இல்லை. இதன் காரணத்தால் தான் பல மூத்த சிங்கள அரசியல்வாதிகள் இந்த தேர்தலில் இருந்து தாமாகவே ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழர் தாயகத்தை எடுத்துக் கொண்டால், அங்கே இன்னும் பழைய அரசியல் தலைவர்கள் பலர் போட்டியிடுகிறார்கள். அவர்கள் எந்த வகையிலும், தமிழ் இளைஞர்களுக்கு வழியை விட்டுக்கொடுக்கவே இல்லை என்பது ஒரு புறம் இருக்க.

வட கிழக்கில் JVP கட்சி போட்டியிட உள்ள நிலையில். தென் இலங்கையில் தாம் அடைந்த வெற்றியைக் காட்டி வட கிழக்கிலும் JVP கட்சிக்கு வாக்குப் போடும் படி சில தலைவர்கள், தூண்டி வருகிறார்கள். இது தமிழர்களை முட்டாளாக்கும் ஒரு விடையம் ஆகும். தமிழர்களுக்கு காணி அதிகாரங்களை கொடுக்கும் 13வது திருத்தச் சட்டம் இலங்கையில் அமுலுக்கு வரும் வேளையில், நீதிமன்றம் சென்று தடை உத்தரவை வாங்கியவர் இந்த அனுரா என்பதனை யாரும் மறந்துவிடக் கூடாது.

எனவே தமிழர்கள் தாம் யாருக்கு வாக்குப் போட உள்ளோம் என்பதனை சிந்தித்து வாக்குகளைப் போடுவது நல்லது. புதிதாக முளைத்த புத்த விகாரைக்கு எதிராகப் போராடினோம், காணி அபகரிப்புக்கு எதிராகப் போராடினோம் , அந்த வகையில் இன்று இந்த JVPக்கும் எதிராக தமிழர்கள் இன்று போராடவேண்டிய சூழ் நிலையில் இருக்கிறார்கள். படித்த மற்றும் இளையோர்களை அதுவும் தமிழர்களை ஆதரியுங்கள் மக்களே. இனியாவது ஒரு விடிவு காலம் பிறக்கட்டும்.