“அட ச்சே..பணத்திற்காக இப்படியா பண்ணுவாங்க….” – சமந்தாவை விளாசும் நெட்டிசங்கள்..!

இந்த செய்தியை பகிருங்கள்

தமிழ் சினிமாவில் தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு ஆந்திரா பக்கம் சென்றவர் நம்ம ஊரு பல்லாவரத்தை சேர்ந்த பொண்ணு நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமான நடிகை சமந்தா, பாணா காத்தாடி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் இடையில் பிரபல நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவருடன் சில காலம் லிவ்விங் டுகெதர் வாழ்ந்து வந்தார்.

அதனை தொடர்ந்து அவரையே திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார். பொதுவாக நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் சினிமாவையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு குடும்பம் குழந்தை குட்டி என்று சென்று விடுவார்கள்.

ஆனால் நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் அதிகப்படியான கவர்ச்சி காட்சிகள் நிறைந்த படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆக்கினார். இதுவே இவருடைய விவாகரத்திற்கும் காரணமாக அமைந்து விட்டது. இதுவரை இவருடைய விவாகரத்திற்கு இது தான் காரணம் என்ற எந்த தகவலும் வராத நிலையில் பல்வேறு காரணங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது படங்களில் நடிப்பதை முழுமூச்சாக முழுவேகத்துடன் செய்து வரும் நடிகை சமந்தா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் இன்ஸ்டாகிராம் விளம்பரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.

அடிக்கடி பிராண்ட் புரமோஷன்களிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் பூமி மற்றும் ஈஸ்வரன் படங்களில் நடித்த நடிகை நீத்து அகர்வால் ஆணுறை விளம்பரத்தில் நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் பேசிய வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில் நடிகை சமந்தாவும் ஆணுறை விளம்பரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் என்ன இருந்தாலும் பணத்திற்காக இப்படியா பண்ணுவாங்க..? என்று சமந்தாவை விளாசி வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க ஆணுறை என்பது அவ்வளவு மோசமான விஷயமா..? முன்னணியில் இருக்கும் நடிகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஏற்படுத்தும் விளம்பரமாக இதனை பார்க்கவேண்டும் இதில் சமந்தாவை திட்டுவதற்கு அல்லது அவருடைய பெயர் டேமேஜ் ஆவதற்கு ஒன்றுமே கிடையாது என்றும் ஒரு தரப்பு ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us