உறவுக்கார பெண் மது குடித்ததும் மாற்றுத்திறனாளி நண்பர்களை அழைத்த வாலிபர்

இந்த செய்தியை பகிருங்கள்

இளம்பெண்ணை மது குடிக்க வைத்து கூட்டு பலாத்காரம் செய்த மாற்றுத்திறனாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் சிவாஜி நகரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண். அந்த இளம் பெண்ணின் உறவினர் மாற்றுத்திறனாளி. குர்லா நேரு நகரில் வசித்து வரும் அவருக்கு ஒரு கண் பார்வை தெரியாது . அந்த நபர் குர்லா நகரிலுள்ள தனது வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கு சென்றதும் இளம்பெண்ணை மது குடிக்க வைத்திருக்கிறார். அவர் மது குடித்ததும் தனது நண்பர்களான மாற்றுத்திறனாளிகளுக்கு போன் போட்டு வரவழைத்திருக்கிறார். அவர்கள் வந்ததும் அந்தப் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதை யாருக்கும் சொல்லக்கூடாது என்று மிரட்டியிருக்கிறார்கள்.

இதனால் தனக்கு நேர்ந்த கொடுமையை அந்தப் பெண் யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார். தற்போது அந்தப் பெண் கர்ப்பம் அடைந்திருப்பதால் வேறு வழியின்றி அந்தப் பெண் போலீசிடம் சென்று புகார் சொல்லியிருக்கிறார்.

போலீசார் மாற்றுத்திறனாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். ஜர்மான் சேக்(36), தாரிக் சேக்(44), மணிபூர் சேக்(44) உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு மாற்றுத்திறனாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us