சிறுமியை வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்த வாலிபர் சிறையிலடைப்பு

இந்த செய்தியை பகிருங்கள்

 

சிறுமியை ஆசை வார்த்தைகள் சொல்லி அழைத்துச் சென்று வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூர் வண்ணாம்பாறை. இப்பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் 17 வயது சிறுமி ஒருவர் வேலை செய்து கொண்டிருக்கிறார். தினமும் வேலைக்கு செல்லும் சிறுமி சம்பவத்தன்று சிறுமி பனியன் நிறுவனத்திற்கு வராததால் கம்பெனியின் உரிமையாளர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் காலையில் பனியன் நிறுவனத்திற்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டுத்தான் வழக்கம் போல் எங்கள் மகள் வேலைக்குச் சென்றாள். ஆனால் பனியன் கம்பெனிக்கு எங்கள் மகள் வேலைக்கு வரவில்லை என்று சொல்கிறார் அந்த கம்பெனிக்காரர் என்று போலீசில் புகார் கொடுக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததில், அதே நிறுவனத்தில் வேலை செய்துவந்த நம்பியூர் ஊரைச் சேர்ந்த தங்கராஜ் என்ற 24 வயது வாலிபர் சிறுமியை அழைத்துச் சென்றது தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்து போலீசார் தங்கராஜ் செல்போன் எண்ணை வைத்து தேடியதில் அவர் தங்கியிருந்த வீட்டை கண்டறிந்தனர். பின்னர் வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்த சிறுமியை மீட்டனர். சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் தன்னிடம் அன்பாக பழகி ஆசை வார்த்தைகள் சொன்னார். வீட்டிற்கு அழைத்தார் அதனால் நான் சென்றேன். அங்கே சென்றதும் கதவை அடைத்து வைத்துவிட்டு என்னை பலாத்காரம் செய்தார் என்று கண்கலங்கி இருக்கிறார்.

இதனால் தங்கராஜை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us