தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..இது தாண்டா தரமான சம்பவம் என்று சொல்ற அளவுக்கு இருக்கு!

தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..இது தாண்டா தரமான சம்பவம் என்று சொல்ற அளவுக்கு இருக்கு!

நீண்ட நாட்களாக அரசியலுக்கு வரும் பிளானுடன் இருந்த நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். வரப்போகும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக போட்டியிட உள்ளதாக அறிவித்த நடிகர் விஜய், அதற்கான ஆரம்பகட்ட பணிகளில் முன்கூட்டியே இறங்கிவிட்டார்.

விஜய்யின், தவெக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி சாலையில் பிரம்மாண்டமான அளவில் அக்டோபர் 27ஆம் தேதியான நாளை நடைபெற இருக்கிறது. பல லட்சம் பேர் பங்கேற்கும் இந்த மாநாட்டுக்கான பாதுகாப்பு பணிகளும், வருவோருக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் இதில் என்ன பேச போகிறார்? அவரது அரசியல் கொள்கை என்ன? மக்களுக்கு எந்த வகையான அரசியல் வாக்குறுதிகளை கொடுக்க இருக்கிறார்? என்பது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விடையாக வருகிறது நாளைய மாநாடு.

நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய போது உதயநிதி ஸ்டாலின், சீமான் உட்பட பல அரசியல் பிரமுகர்களும், பல்வேறு சினிமா பிரபலங்களும் வரவேற்புகளும் வாழ்த்துக்களையும் அளித்தனர். நடிகர் அஜித் சினிமாவில் ஆக்டிவாக இருப்பதுடன் தனது பணிகளை நிறுத்திக் கொள்வார். அரசியலில் எப்போதும் கலந்து கொள்ளவே மாட்டார். ஆனால் அவர் தற்போது ஒரு விஷயத்தில் மௌனம் காத்திருப்பது ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறி இருக்கிறது.

2019 ஆம் ஆண்டு அஜித்தின் ரசிகர்கள் சிலர் பாஜக கட்சியில் இணைந்ததாக தகவல்கள் வெளியானது. இதைஅடுத்து அஜித்தும் கட்சியில் சேர இருப்பதாக பேசப்பட்டது. இந்த தகவல் வெளியான உடனேயே எதற்கும் வாய்ப்பு இருக்காது அஜித், தனது செய்தி தொடர்பாளர் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் தனக்கு எந்த அரசியல் கட்சியுடனும் சம்பந்தம் இல்லை என்று தெளிவாக குறிப்பிட்டாக, தேர்தலின் போது வாக்களிப்பதுடன் தன் கடமை நின்று விடுவதாக கூறினார்.

தற்போது விஜயின் தவெக மாநாடு நடைபெற இருக்கும் சமயத்தில் அஜித்தின் ரசிகர்கள் சிலர் இந்த கட்சியில் சேர்ந்து விட்டதாக தகவல்கள் பரவியது. ஆனால் இதை அஜித் மறுக்கவோ ஏற்கவோ இல்லை. இதுகுறித்து எந்த பத்திரிகை செய்திகளையும் வெளியிடவும் இல்லை. இவரது இந்த மௌனம், விஜய் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது போல இருப்பதாக நெட்டிசன்கள் சிலர் பேசி வருகின்றனர். அது மட்டுமல்ல, தவெக மாநாடு நடக்கும் திடலில் அஜித்தின் ரசிகர்கள் விஜய்-அஜித் இருவருக்கும் கட்-அவுட் வைத்திருக்கின்றனர்.

நடிகர் விஜய்யையும் அஜித்தையும் இப்போதும் பலர் போட்டி நடிகர்களாக கருதி வருகின்றனர். இவர்கள் ஒரு காலத்தில் போட்டி பாேட்டு தங்களின் படங்களை ரிலீஸ் செய்தது உண்மை என்றாலும், அதன் பிறகு தனித்தனி வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்டனர். உண்மையில், இருவரும் வெளியில் சொல்லிக்கொள்வதில்லை என்றாலும் நல்ல நண்பர்களாகவே இருக்கின்றன். நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ படத்தை வெங்கட் பிரபு இயக்கிய போது அவரிடம் பேசிய அஜித், “மங்காத்தா படத்தை விட பல மடங்கு இந்த படம் நல்லா வரணும்” என்று ஆர்டர் போட்டாராம். அதே போல, மாஸ்டர் படத்தை பார்த்த இவர், அதில் நடித்திருந்த அர்ஜுன் தாஸிடம் “கண்டிப்பா ஒரு படம் ஒன்னா பண்ணலாம்” என்றும் கூறியிருக்கிறார். விஜய்-அஜித்தின் ரசிகர்கள்தான் இன்னும் இணையதளத்தில் சண்டை போட்டு நேரத்தை வீணடித்து வருகின்றனர்.

actor vijay,ajith,political,cinima news.