அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு , இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், எவராலும் சரியான கருத்து கணிப்பை கூற முடியாத நிலை தோன்றியுள்ளது. அந்த அளவுக்கு டொனால் ரம் மற்றும் கமலா ஹரிஸ் ஆகியோருக்கு இடையே பெரும் போட்டி நிலவுகிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் என்பது மிக மிக சிக்கலான ஒரு பொறிமுறையாக உள்ளது.
அமெரிக்காவில் 52 மாநிலங்கள் இருந்தாலும், வெறும் 6 மாநிலங்களே ஜனாதிபதி தேரிவில் மிக முக்கிய இடங்களை வகிக்கிறது. குறித்த 6 மாநிலங்களில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர்களுக்கே வாய்ப்பு இருக்கிறது. இதனால் குறித்த அந்த 6 மாநிலங்களில், இருவருமே சம நிலையில் உள்ளது போன்ற ஒரு தோற்றப்பட்டு உள்ளது.
நடக்கவுள்ள தேர்தலில், வெறும் 1 அல்லது 2 சத விகித வாக்கு வித்தியாசத்தில் தான் எவரும் வெல்ல முடியுமே தவிர. பெரும் வெற்றி என்று எவருக்கும் வராது. தற்போதைய நிலவரப்படி கமலா ஹரிஸ் சற்று முன்னணியில் உள்ளார். அதுவும் சுமார் 1 சத விகிதம் தான் என்பது , குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.